சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் OnePlus நிறுவனம், தனது புதிய ஸ்மார்ட்போனான OnePlus Nord 6-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் அதன் சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் மேம்பட்ட சிப்செட் காரணமாக ஸ்மார்ட்போன் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நார்ட் சீரிஸ் மூலம் பிரீமியம் மிட்-ரேஞ்ச் போன்களை வழங்கிவரும் ஒன்பிளஸ், இந்த புதிய மாடலையும் அதே வரிசையில் வெளியிட்டுள்ளது. இது 8GB மற்றும் 12GB ரேம் ஆகிய இரண்டு விருப்பங்களில் கிடைக்கிறது.
இந்த போனின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- 6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே
- Android 16 இயங்குதளம்
- Snapdragon 8s Gen 4 சிப்செட்
- 8GB / 12GB ரேம்
- 256GB ஸ்டோரேஜ்
- பின்புற கேமரா: 50MP + 8MP
- முன்புற கேமரா: 32MP
- 9,000mAh பேட்டரி
- 80W அதிவேக சார்ஜிங் ஆதரவு
- ரிவர்ஸ் சார்ஜிங் வசதி
- USB Type-C போர்ட்
- 5G நெட்வொர்க் ஆதரவு
- ட்யூயல் சிம் ஸ்லாட்
- மூன்று வண்ணங்களில் கிடைக்கும்
இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ. 38,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
