பெண்கள் மீது துஷ்பிரயோகம்: தவெக மீது மகளிர் ஆணையத்தில் புகார்

பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலராக இருந்த ரஞ்சனா, மும்மொழிக் கொள்கை திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

அதன் பின்னர், தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் மீது விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்த ரஞ்சனா, அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து வெளியேறும் பெண்கள் மீது அவதூறு பரப்பப்படுவதுடன், துஷ்பிரயோகமும் செய்யப்படுவதாக மாநில மகளிர் ஆணையத்தில் திமுக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “கட்சியைவிட்டு வெளியேறும் அனைத்து பெண்களும், மோசமான வார்த்தைகள் மற்றும் அச்சுறுத்தும் அழைப்புகளால் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர். விஜய் அவரது தொண்டர்களின் இந்த துஷ்பிரயோக நடவடிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியிலிருந்து வெளியேறிய பெண்கள் மீதான துஷ்பிரயோகத்தை நிறுத்த விஜய் பொறுப்பேற்க வேண்டும். இதனாலேயே, அக் கட்சியிலிருந்து வெளியேற பெண்கள் பயப்படுகின்றனர். வாக்குகளைப் பெறுவதற்காக விஜய் அரசியல் நாடகம் போடுகிறார். பொறுப்பற்ற தலைவரை தமிழக பெண்கள் தேர்வுசெய்ய மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

Related News

Latest News