பவர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக HPCL நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மோதல் தொடரும் சூழலில், இதனால் கச்சா எண்ணெய் சப்ளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்கனவே 100 டாலரை கடந்துவிட்டது. இந்நிலையில், பவர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக HPCL நிறுவனம் அறிவித்துள்ளது. அன்றாடப் பயன்பாட்டில் உள்ள சாதாரண வகை பெட்ரோலின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
