மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்

மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தல் தேதிகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 152 இடங்களுக்கு ஏப்.23-ஆம் தேதி, மீதமுள்ள 142 இடங்களுக்கு ஏப்.29-ஆம் தேதி என இருகட்ட வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக துஷ்யந்த் நாரியாலாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உள்துறை செயலாளரையும் மாற்றி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் மாநில தலைமைச் செயலாளராக நந்தினி சக்ரவர்த்தி பொறுப்பு வகித்து வந்த நிலையில் தற்போது புதிய தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related News

Latest News