Airtel கஸ்டமர்களுக்கு OTT இலவசம், Data க்கு மட்டும் காசு கொடுத்தா போதும்.!

ஏர்டெல் நிறுவனம் டேட்டாவுடன் இலவச ஓடிடி சந்தாவையும் வழங்கும் 4 சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.

ரூ.100 திட்டம்:

இந்த திட்டத்தில் மொத்தம் 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதலாக 1 மாத காலத்திற்கு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் கிடைக்கும். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள்.

ரூ.195 திட்டம்:

இந்த திட்டத்தில் 12 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் 3 மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, சோனிலைவ் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே மூலம் 20 ஓடிடி சேனல்கள் போன்ற நன்மைகளும் கிடைக்கும். இதன் செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள்.

ரூ.279 திட்டம்:

இந்த திட்டத்தில் 1 ஜிபி டேட்டாவுடன் நெட்ஃப்ளிக்ஸ் பேசிக், ஜியோ ஹாட்ஸ்டார் சூப்பர், ஜீ5 பிரீமியம், சோனிலைவ் உள்ளிட்ட ஓடிடி சந்தாக்களும் வழங்கப்படுகின்றன. அதேபோல் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே மூலம் 20 ஓடிடி சேவைகளையும் பயன்படுத்த முடியும். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள்.

ரூ.361 திட்டம்:

இந்த திட்டத்தில் மொத்தம் 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதலாக 3 மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள்.

இந்த அனைத்து திட்டங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள 30 நாட்கள் என்பது டேட்டா பயன்படுத்துவதற்கான காலக்கெடு மட்டுமே. அதாவது அந்த காலத்திற்குள் வழங்கப்பட்ட டேட்டாவை பயன்படுத்த வேண்டும். மேலும், இந்த திட்டங்களை தனியாக ரீசார்ஜ் செய்ய முடியாது. ஏற்கனவே ஒரு செயல்பாட்டில் இருக்கும் முதன்மை ரீசார்ஜ் திட்டம் இருந்தால் மட்டுமே இத்திட்டங்களை பயன்படுத்த முடியும்.

Related News

Latest News