‘ஜனநாயகன்’ படத்திற்கு தொடரும் சென்சார் பிரச்சனை.!

நடிகர் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வெளியாவதாக இருந்தது. அதாவது, கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல், மறுஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதையடுத்து, படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்சன்ஸ், சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத் தீர்ப்பும் சாதகமாக கிடைக்காததால், ‘ஜனநாயகன்’ பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ரிவைசிங் கமிட்டி இன்று படத்தை பார்ப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் இன்று திடீரென அது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கமிட்டி உறுப்பினர்களில் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சென்சார் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் தொடர்கிறது. வருகிற 17-ம் தேதி மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Related News

Latest News