‘திமுக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே கிடையாது’ – தவெக தலைவர் விஜய் பேச்சு

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு கழுத்தில் பச்சை துண்டு எண்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது :

மக்களின் உண்மையான பிரதிநிதி என்பதால் தமிழ்நாடு தான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு என முந்தைய கூட்டத்தில் கூறினேன்.

பயமுறுத்தும் வேலை இனி எடுபடாது, அதனால் தான் நான் பேசுவதை மாற்றிபேசி அவதூறு பரப்புகின்றனர்.

ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி என குழந்தைகள் கூட சொல்லத்தொடங்கி உள்ளனர்.

தமிழ்நாடு தான் தவெக, தவெக தான் தமிழ்நாடு.. வரும் தேர்தலில் விசில் பறக்கும்.

எனக்கும் தமிழ்நாட்டு மக்களும் இடையில் யாராலும் நுழைய முடியாது.

தமிழ்நாட்டு அணி, டெல்லி அணி என்று சொல்கிறார்கள். கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டெல்லி அணியால் தொட்டுக் கூட பார்க்க முடியாது. அப்படி இருக்கும்போது, கிரிக்கெட்டில் விசில் போடுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத்தான்.

எனக்கு விவசாயத்தை பற்றி விவரமாக தெரியாது. ஆனால் விவசாயிகள் பிரச்சினை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அடுத்த ஜென்மத்தில் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

மற்றவர்கள் மாதிரி டெல்டா காரன் என்று உங்கள் காதில் டால்டா ஊற்ற வரவில்லை. டெல்டா காரன் என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளின் பிரச்சனைகள் பற்றி கவனித்தாரா?

விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தது திமுக அரசு.

மணல் மாஃபியா குரூப்புக்க்கு ஆதரவு அளிப்பது உங்கள் திமுக அரசுதானே.

விஜய் வந்தால் நமக்கு பிழைப்பு போய்விடும் என்று இரண்டு கட்சிகளும் சேர்ந்து சதி செய்கின்றன.

என்னை முடக்கலாம், ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள விஜய்யை முடக்க முடியாது.

திமுக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே கிடையாது.

இவ்வாறு அவர் பேசி வருகிறார்.

Related News

Latest News