ஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 165 ஆக உயர்வு

பயங்கரவாதிகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது எனக்கூறி அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவை இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் பெண்கள் தொடக்கப்பள்ளி மீது இஸ்ரேல் – அமெரிக்கா நேற்று முன்தினம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் 85 மாணவிகள் பலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பலர் காயமடைந்தனர். தற்போது இந்தக் கொடூர தாக்குதலில் பலியான மாணவிகளின் எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

Related News

Latest News