இந்தியாவில் WhatsApp Web பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள் மார்ச் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய பாதுகாப்பை முன்னிட்டு, வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தும் பயனர்கள் ஒவ்வொரு 6 மணிநேரத்திற்கும் ஒருமுறை தானாகவே வெளியேற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, மீண்டும் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து உள்நுழைய வேண்டியிருக்கும்.
மேலும், தொலைத்தொடர்புத் துறையின் புதிய ‘சிம் இணைப்பு’ விதிகளின்படி, பதிவு செய்யப்பட்ட சிம் கார்டு மொபைல் சாதனத்தில் இருந்தால்தான் வாட்ஸ்அப் செயல்படும் என கூறப்பட்டுள்ளது. சிம் கார்டு அகற்றப்பட்டாலோ அல்லது செயலிழந்தாலோ, வாட்ஸ்அப் சேவை உடனடியாக நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு மந்திரி Jyotiraditya Scindia கூறுகையில், “இணைய வழி மோசடிகளைத் தடுப்பதற்காக 6 மணிநேரத்திற்கு ஒருமுறை வெளியேற்றும் நடைமுறை அவசியமானது. வணிக வசதிகளை விட நாட்டின் பாதுகாப்பே முதன்மை. உடனடியாக அனைத்து நிறுவனங்களும் இந்த விதியை செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
