உங்களிடம் கிழிந்த அல்லது சேதமடைந்த நோட்டுகள் உள்ளனவா? அவற்றை மாற்றுவது எப்படி என்ற குழப்பம் இருந்தால், இதோ தேவையான தகவல்கள்.
கிழிந்த, பழைய அல்லது சேதமான நோட்டுகளை வங்கிகளிலும் Reserve Bank of India (RBI) பிராந்திய அலுவலகங்களிலும் இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். இதற்காக எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.5,000 மதிப்பிலான நோட்டுகள் அல்லது 20 நோட்டுகள் வரை நேரடியாக மாற்றிக் கொள்ளலாம். இந்த வரம்பை மீறினால், சம்பந்தப்பட்ட வங்கியில் தனிப்பட்ட விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். சில நேரங்களில் சேவை கட்டணம் விதிக்கப்படலாம். பொதுவாக நோட்டுகளை மாற்ற ஆவணங்கள் தேவையில்லை என்பது மக்களுக்கு ஒரு முக்கிய சலுகையாகும்.
ரூ.1 முதல் ரூ.20 வரையிலான நோட்டுகள் இரண்டு துண்டுகளுக்கு மேல் கிழிந்திருக்கக் கூடாது. மேலும், நோட்டின் எண் தெளிவாக இருக்க வேண்டும்.
ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.2000 போன்ற உயர்மதிப்புள்ள நோட்டுகளுக்கு குறிப்பிட்ட விதிமுறைகள் உள்ளன. நோட்டின் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட பகுதி இருந்தால் முழு மதிப்பு வழங்கப்படும். 40 முதல் 80 சதவீதம் வரை இருந்தால், விதிமுறைகளின்படி பகுதி மதிப்பு வழங்கப்படும்.
முழுமையாக சேதமடைந்த, எண் தெரியாத அல்லது திருத்தப்பட்ட நோட்டுகள் ஏற்கப்படமாட்டாது. அவை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு முடிவு செய்யப்படும்.
எனவே, கிழிந்த அல்லது பழுதடைந்த நோட்டுகளை வீணாக்காமல், அருகிலுள்ள வங்கியில் மாற்றிக் கொள்ளுவது நல்லது.
