Monday, February 23, 2026

மதுபோதையில் காரை ஓட்டிய நபரை புரட்டி எடுத்த மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே, குண்டாறு கரையில் அமைந்துள்ள ஒரு மதுக்கடையில் மது அருந்திய சிலர், பின்னர் பேருந்து நிலையம் நோக்கி வந்தபோது காரில் இருந்தவர்களுக்கிடையே திடீர் தகராறு ஏற்பட்டது.வாக்குவாதம் தீவிரமடைந்ததால் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

அதன்பின் காரை ஓட்டிய இளைஞர், கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் இருந்த பழக்கடை, பெட்டிக்கடை, இருசக்கர வாகனங்கள் மற்றும் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது தாறுமாறாக மோதியுள்ளது.

இந்த சம்பவத்தில் இரண்டு இளைஞர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டது. சாலையோரத்தில் நின்றிருந்த பொதுமக்கள் உயிர் காக்க அச்சத்துடன் அருகிலிருந்த கடைகளுக்குள் ஓடி தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்த மக்கள் காரை ஓட்டிய அந்த நபரை புரட்டி எடுத்துள்ளனர்.

பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரே ஒரு காவலர், குடிபோதையில் காரை இயக்கிய நபரை தடுக்க பலமுறை முயன்றும் முடியாமல் போராடியதாக கூறப்படுகிறது. இதனால் பேருந்து நிலையம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.

காயமடைந்த இருவரையும் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News