Monday, February 23, 2026

பட்ஜெட் விலையில் மேக்புக் மடிக்கணினி., எப்போது அறிமுகம் தெரியுமா?

உலக மொபைல் போன் சந்தையில் முன்னணி இடத்தை பிடித்துள்ள Apple Inc. நிறுவனம், லேப்டாப் சந்தையிலும் தனது நிலையை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு மலிவு விலையில் மேக்புக் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

தற்போது, வரும் மார்ச் மாதத்தில் குறைந்த விலையில் புதிய மேக்புக் லேப்டாப் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஆப்பிள் வெளியிட்ட மேக்புக் மாடல்களில் மிகவும் விலை குறைந்ததாக இந்த சாதனம் இருக்கும் என தொழில்நுட்ப வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்த புதிய மேக்புக் லேப்டாப்பில் A18 Pro சிப்செட், 12.9 இன்ச் LCD திரை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நீலம், மஞ்சள் மற்றும் பிங்க் போன்ற வண்ணங்களில் இது வெளியாகலாம் என கூறப்படுகிறது.

அமெரிக்க சந்தையில் இதன் விலை சுமார் 500 அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.46,000 ஆகும்.

மார்ச் 4ஆம் தேதி நடைபெறவுள்ள அறிமுக நிகழ்ச்சியில், இந்த மலிவு விலை மேக்புக்குடன் சேர்த்து iPhone 17e ஸ்மார்ட்போன், மேம்படுத்தப்பட்ட MacBook Pro, புதிய iPad Air மற்றும் iPad (12ஆம் தலைமுறை) சாதனங்களையும் Apple Inc. அறிமுகப்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News

Latest News