விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள பெண்ணைவலம் கிராமத்தை சேர்ந்த சிவசங்கர் மகன் பாலாஜி (21) சென்னையில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
பாலாஜியின் மனைவி அனுஷா (21) இவரை கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இரு குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டுள்ளார். அனுஷா 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் தனது நாத்தனார் சுமித்ராவுடன் பெண்ணைவலம் கிராமத்தில் வசித்து வந்தார்.
அனுஷாவின் கணவர் பாலாஜி தனது மனைவி அனுஷாவிடம் அடிக்கடி வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று சென்னையில் இருந்து செல்போன் வழியாக பிரச்சனை செய்துள்ளார் பாலாஜி, அதற்கு மனமுடைந்த அனுஷா, காலை 10:15 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலை செய்து கொண்டார்.
திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனுஷாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அனுஷாவின் தாய் கல்யாணி, மகளின் தற்கொலைக்கான காரணமானோருக்கு நடவடிக்கை எடுக்க கோரி திருவெண்ணெய்நல்லுார் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து அனுஷாவின் மாமனார் சிவசங்கர், மாமியார் சுமதி மற்றும் நாத்தனார் சுமித்ரா ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
