Saturday, February 21, 2026

மதுபோதையில் தாயை கொன்ற மகன்., பாகற்காய் சமைத்தால் ஆத்திரம்

மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டம் டோங்கர்கான் கிராமத்தை சேர்ந்தவர் சுமித்ரா பெட்குலே (65). இவரது மகன் ஜெகதீஷ் பெட்குலே (37). அவர் மதுபோதைக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.

மதுப்பழக்கம் காரணமாக, ஜெகதீஷின் மனைவி இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன் பின்னர், ஜெகதீஷ் தனது தாயுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், ஒரு நாள் இரவு ஜெகதீஷ் மதுபோதையில் வீட்டிற்கு திரும்பினார். அவருக்கு பிடிக்காத உணவான பாகற்காய் சமைத்திருந்ததை காரணமாக கொண்டு, தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் தீவிரமடைந்த போது, ஆத்திரமடைந்த ஜெகதீஷ் தனது தாயை கடுமையாக கையால் தாக்கினார். இந்த தாக்குதலில் சுமித்ரா பெட்குலே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், ஜெகதீஷ் கிராமத்தில் சுற்றித் திரிந்து, தன் தாயைக் கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். அவர் மதுபோதையில் இருந்ததால், முதலில் கிராம மக்கள் அவரது பேச்சை பொருட்படுத்தவில்லை. ஆனால் பின்னர் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், சுமித்ரா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டனர். இதையடுத்து ஜெகதீஷை கைது செய்தனர். சுமித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News