அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
ஜோலார்பேட்டை மண்டலவாடியில் இன்று(பிப். 14) நடைபெற்ற திமுக வடக்கு மண்டல வாக்குச் சாவடி குழு பயிற்சி மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் திமுகவில் இணைந்தார்.
முன்னதாக, அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபீல் அதிமுகவில் இருந்து விலகுவதாக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், ஜோலார்பேட்டை மண்டலவாடியில் நடைபெற்ற மாநாட்டில் நிலோபர் கபீல் திமுகவில் இணைந்தார்.
