20.08.2026; தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவுன்னு தெரியுமா?

இந்தியாவில் தங்கத்தின் மீதான மக்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை உயர்ந்தாலும் நகைக்கடைகளில் கூட்டம் குறைவதில்லை.

இந்தாண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.1.34 லட்சத்தை எட்டிய நிலையில், அடுத்த சில மாதங்களில் ரூ.2 லட்சத்தை எட்டும் என நகை வியாபாரிகள் கணித்திருந்தனர்.

அமெரிக்கா–ஈரான் போர் பதற்றம் காரணமாக கடந்த சில மாதங்களில் முதலீட்டாளர்களின் கவனம் கச்சா எண்ணெய் மீது திரும்பியதால் தங்கத்தின் விலை குறைந்தது.

தற்போது போர் பதற்றம் சற்று தணிந்து, ஹார்மூஸ் வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து சீராகியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விநியோகமும் ஓரளவு மேம்பட்டுள்ளது.

இதனையடுத்து முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தின் மீது கவனம் செலுத்தி, அதிகளவில் தங்கத்தை வாங்கி வருகின்றனர். இதன் தாக்கமாக தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.

இன்று தங்கம் கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.14,600-க்கும், சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்து ரூ.1,16,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.260-க்கும், கிலோ ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Related News

Latest News