ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்பதை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட ஐந்து ஐரோப்பிய நாடுகள் உறுதி செய்துள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த அவரது உடலில் எபபாட்டடின் (Epibatidine) என்ற விஷம் இருந்ததை இந்த நாடுகள் உறுதி செய்தன. இது தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு தவளை இனத்துக்கு உள்ள விஷம் எனவும் இந்த நாடுகள் தெரிவித்துள்ளனர். மேலும், சர்வதேச சட்ட விதிகளை புறக்கணித்து இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தி உள்ளதாக இந்த ஐந்து ஐரோப்பிய நாடுகளும் கூறியுள்ளன.
