திமுக தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூரத்தி பரபரப்பான கருத்துகளுக்கும், சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை கொடுங்கையூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசினார். அப்போது அவர் ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் பாஜக மாநிலத் துணைத் தலைவருமான நடிகை குஷ்பூ குறித்து ஆபாசமாக பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக காவல்துறையினர் அவதூறு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று அதில் தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள், 3 மாதங்கங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அவருக்கு ரூ.20,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
