Saturday, February 14, 2026

மகளிருக்கு வழங்கிய ரூ.5,000 தொகை திருப்பி எடுக்கப்படும் என பரவும் வதந்தி

தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

மகளிருக்கு அரசு வழங்கிய ரூ.5,000 தொகை திருப்பி எடுக்கப்படும் என்று பரவும் வதந்தி!

பரவிய செய்தி

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கிய உரிமைத் தொகையை வங்கியிலிருந்து மாலைக்குள் எடுக்காவிட்டால் பணம் திருப்பி எடுக்கப்படும் என்ற தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன?

தமிழ்நாடு அரசு வழங்கக்கூடிய கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் சேர்த்து ரூ.5 ஆயிரம் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்குச் செலுத்தியது.

இத்தொகையை அன்று மாலைக்குள் வங்கியிலிருந்து எடுத்து விட வேண்டும் என்பது முற்றிலும் தவறான தகவல். தமிழ்நாடு அரசு இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தவறான தகவலைப் பரப்பாதீர்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related News

Latest News