Monday, February 2, 2026

ரயிலில் அன்-ரிசர்வ் பெட்டிகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் மட்டுமே இருக்கும். ஏன் தெரியுமா?

ரயிலில் பயணிக்கும் மக்களின் பெரும்பாலானோர் பொதுப் பெட்டிகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இந்த பொதுப் பெட்டிகள் பெரும்பாலும் ரயிலின் முன்புறம் அல்லது பின்புறத்தில் மட்டுமே இணைக்கப்படுகின்றன. ரயிலின் நடுப்பகுதியில் பொதுப் பெட்டிகள் ஏன் வைக்கப்படுவதில்லை என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.

இதற்கான முக்கிய காரணம் எடை சமநிலை ஆகும். பொதுப் பெட்டிகளில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அந்தப் பெட்டிகளில் கூடுதல் எடை உருவாகிறது. இந்த எடை ரயிலின் நடுப்பகுதியில் குவிந்தால், ரயிலின் சமநிலையும் இயக்க நிலைத்தன்மையும் பாதிக்கப்படும். அதனால், முன்புறம் மற்றும் பின்புறம் பொதுப் பெட்டிகளை அமைப்பதன் மூலம் எடை சமமாகப் பகிரப்பட்டு, ரயில் பாதுகாப்பாக இயங்க முடிகிறது.

பொதுப் பெட்டிகளில் அதிக கூட்டம் இருப்பதால், அவற்றை ரயிலின் இரு முனைகளிலும் வைப்பது பயணிகள் நெரிசலை கட்டுப்படுத்த உதவுகிறது. நடைமேடையின் ஒரே பகுதியில் மட்டும் கூட்டம் அதிகமாக திரண்டுவிடாமல், இரு பக்கங்களிலும் பயணிகள் பரவலாக ஏறி இறங்க முடிகிறது. இதனால் நடுப்பகுதியில் உள்ள முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிக்கும் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதில்லை.

நடுவில் இருக்கும் AC / Sleeper போன்ற Reserved coach-களில் முன்பே சீட் வாங்கியவர்கள் பயணிப்பார்கள். General coach-கள் நடுவில் இருந்தால், உள்ளே வருவோர்-போவோர் அதிகமாகி தொந்தரவு அதிகரிக்கும்

இந்த அனைத்து காரணங்களாலும், பொதுப் பெட்டிகள் ரயிலின் நடுப்பகுதியில் இல்லாமல் முன்புறம் மற்றும் பின்புறத்தில் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் பயணிகள் பாதுகாப்பும், ரயிலின் இயக்க நிலைத்தன்மையும், நேர்த்தியான இயக்கமும் உறுதி செய்யப்படுகிறது.

Related News

Latest News