மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 – 27 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் இன்று(பிப். 1) தாக்கல் செய்து உரையாற்றினார்.
புற்றுநோய்க்குத் தேவையான 17 மருந்து வகைகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் மேலும் 7 அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கான இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், அரிய நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள், மருத்துவப் பொருள்கள் இறக்குமதி செய்வதற்கு, இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கும் பட்டியலில் மேலும் 7 அரிய நோய்களைச் சேர்க்க முன்மொழிகிறேன்” என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் அதிக விலை கொண்ட அத்தியாவசிய மருந்துகள் நாடு முழுவதும் உள்ள புற்றுநோயாளிகளுக்குக் குறைந்த விலையில் கிடைக்கும். இதன் மூலம் அவர்களால் எளிதாகக் குறைந்த செலவில் சிகிச்சை பெற முடியும்.
