இன்றைய தினம் காலை தங்கம் சவரனுக்கு ரூ.4,800 விலை குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.600 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.16,200-க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.1,29,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.415 விற்பனை செய்யப்பட்டது கிலோவிற்கு ரூ.10 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.4,15,000 விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலையும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.350 குறைந்து ரூ.15,850க்கும், சவரனுக்கு ரூ.2,800 குறைந்து ரூ.1,26,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.405க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.4,05,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
