நடிகர் அஜித் குமார், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “மங்காத்தா”. இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அஜித்தின் முதல் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
தற்போது இப்படம் வரும் ஜனவரி 23ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவுகள் துவங்கியுள்ளன. முன்பதிவு ஆரம்பமான சில மணி நேரங்களிலேயே பல திரைகள் ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளது அஜித் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
