Friday, February 13, 2026

பெண்களுடன் நெருக்கமாக இருந்த கர்நாடக டிஜிபி இடைநீக்கம்

கர்நாடக மாநில குடிசார் உரிமைகள் அமலாக்கப் பிரிவின் டிஜிபியாக கே. ராமச்சந்திர ராவ் தற்போது பணியாற்றி வருகிறார். இவர் தனது அலுவலகத்தில் சீருடையில் பெண்களுடன் மிக நெருக்கமாக இருப்பதாகக் காட்டும் விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

வீடியோ தொடர்பாக ராமச்சந்திர ராவ் நிருபர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது,“நான் பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் 8 ஆண்டுகளுக்கு முன்பு, பெலகாவி மண்டல ஐ.ஜி.யாக இருந்தபோது எடுக்கப்பட்டது. அந்த பழைய வீடியோக்களை யாரோ வெளியிட்டுள்ளனர்” என்றார்.

சிறிது நேரத்தில், முதலில் கூறிய கருத்தை ராமச்சந்திர ராவ் மறுத்து, பல்டி அடித்து மீண்டும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,“இந்த வீடியோக்கள் உண்மை அல்ல. அவை போலி வீடியோக்கள் என கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் அமைத்து முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். மேலும், விசாரணை முடியும் வரை ராமச்சந்திர ராவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Related News

Latest News