தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,06,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,290-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளயின் விலை கிலோவுக்கு ரூ.3,000 அதிகரித்து ரூ.3,10,000-க்கும், கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ஒரு கிராம் ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,230-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலையும் சற்று சரிவை சந்தித்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ.4,000 குறைந்து, ரூ.3,06,000-க்கும், கிராமுக்கு ரூ.4 குறைந்து, ஒரு கிராம் ரூ.306-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
