தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு பிரசவ வார்டு, குழந்தைகள் சிகிச்சைக்கான வார்டு உள்ளன.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் தென்பெரம்பூர் பகுதியை சேர்ந்த சரண்யா என்ற பெண், தனது குழந்தையின் சிகிச்சைக்காக குழந்தை சிகிச்சை வார்டில் அனுமதித்தார்.
சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக காத்திருந்தனர். அப்போது, மருத்துவமனை மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து, சரண்யாவின் தலையில் விழுந்தது. இதில், படுகாயமடைந்த சரண்யா தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
