Monday, January 12, 2026

பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன், ஆனால் – வெளிவந்த முக்கிய தகவல்

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜன நாயகன்’ ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்று வழங்கப்படாததால் கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

‘ஜனநாயகன்’ படம் சுமார் 80% ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் எனும் கருத்து சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் பகவந்த் கேசரி Amazon Prime OTT தளத்தில் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்து அசத்தியது.

இந்நிலையில், ‘பகவந்த் கேசரி’ இயக்குநர் அனில் ரவிபுடி, அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “‘பகவந்த் கேசரி’ படத்தின் முதல் 20 நிமிடங்கள், இடைவேளை மற்றும் இரண்டாம் பாதியின் சில பகுதிகள் என சில விஷயங்கள் மட்டுமே ஜன நாயகன் படத்தில் அப்படியே இருக்கும். மற்றபடி வில்லன் கதாபாத்திரத்தை முழுமையாக மாற்றி, ரோபோ மற்றும் Sci-Fi அம்சங்களைச் சேர்த்துள்ளனர். தமிழ் ரசிகர்களுக்கு அது கண்டிப்பாக ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Related News

Latest News