திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதில், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தமிழக அரசில் மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம் ஏற்றலாம் எனவும் திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் ஜி.ஆர் சுவாமிநாதனின் தீர்ப்பு செல்லும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
