சென்னை, நொளம்பூர் காவல் நிலையத்தில் பல குற்ற வழக்குகளுடன் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளி கோபி, மது போதையில் சிற்றூண்டி கடையில் ரகளையில் ஈடுபட்டார். அதீத மது போதையில் இருந்த ரவுடி கோபி, ஜெ. ஜெ நகரில் உள்ள சிற்றுண்டி கடையில் பணம் கொடுக்காமல் உணவை கொடுக்க வேண்டும் என கடைக்காரரிடம் தகராறு செய்துள்ளார்.
அதே கடையில் உணவருந்த வந்திருந்த தீயணைப்பு துறை காவலர் ஒருவர் கோபியை அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளார். மது போதையில் இருந்த கோபி காவலர் என அறியாமல் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் காவலரின் சட்டையை பிடித்து இழுத்து சாலையில் தள்ள முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் காவலர், கோபியை அடித்ததாக தெரிகிறது. இதைப்பார்த்த பொதுமக்கள் காவலருடன் இணைந்து கோபியை அடித்து ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த காவல்துறையினர் கோபியை அங்கிருந்து அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
