வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சவரன் தங்க விலை ₹1 லட்சத்தைக் கடந்துள்ளது. நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயரும் இந்த விலை, சாமானியர்களை அதிர்ச்சியடையச் செய்கிறது.
ஆண்டுதோறும் தங்க விலை உயர்வது இயல்புதான் என்றாலும், ₹1 லட்சம் எனும் உச்சத்தை அடைந்தது நடுத்தர வர்க்கத்தை கலக்கமடையச் செய்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ₹50,000 ஆக இருந்த சவரன் தங்கம், அடுத்த 1.5 ஆண்டுகளில் கிடுகிடுவென உயர்ந்து உச்சத்தைத் தொட்டுள்ளது.
விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணங்கள்
உலக நாடுகளின் வங்கிகள், கருவூலங்கள், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தை அதிக அளவில் வாங்கிக் குவிப்பது.
தனியார் முதலீடுகள் பெருகுதல்.
உலகளாவிய போர் பதற்றம்.
அமெரிக்காவில் டிரம்ப்பின் தடாலடிகள்: இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50% வரி.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு.
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு. இந்தக் காரணங்களால் தங்க விலை அதிரடியாக உயர்கிறது.
மேலும் உலக முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. அவர்களின் அதிக முதலீட்டால்தான் இந்த விலை ஏற்றம். இனி வரும் நாட்களிலும் இது தொடரும் என்கின்றனர் நகை வியாபாரிகள்.
வெள்ளி விலை
தங்கம் விண்ணை முட்டுவதுபோல வெள்ளியும் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் கிலோ வெள்ளி ₹2.15 லட்சமாக உள்ளது. தங்கம், வெள்ளி விலைகள் ஒருசேர உயரும் நிலையில், இனி தங்களால் தங்கம் வாங்க முடியுமா? என கவலைப்படுகின்றனர் சாமானிய மக்கள்.
