முதலமைச்சர் விஜய்யின் அடுத்த ‘சம்பவம்’! ரூ.264 கோடியில் ’65’ அதிரடிப் படைகள்!

தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கி வரும் போதைப்பொருள் புழக்கத்தை வேரறுக்க, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு ஒரு மிகப்பெரிய அதிரடி நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க 65 ‘சிறப்பு அதிரடிப் படைகளை’ (Special Task Forces) உருவாக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்காக சுமார் 264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போதே போதைப்பொருளுக்கு எதிராகத் தனது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று விஜய் உறுதியளித்திருந்த நிலையில், தற்போது அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த 65 சிறப்புப் படைகளும் முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என்பது இதன் மிக முக்கியமான அம்சமாகும். மாநில அளவில் இந்தப் படைகளின் செயல்பாடுகளை வழிநடத்த ஒரு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ADGP) நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் 37 மாவட்டங்களில் தலா ஒரு சிறப்புப் படையும், சென்னை மாநகரத்தின் பாதுகாப்பிற்காக மட்டும் பிரத்யேகமாக 12 சிறப்புப் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, ஆவடி, தாம்பரம், சேலம், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தலா இரண்டு சிறப்புப் படைகள் போதைப்பொருள் தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

இந்தப் புதிய அதிரடிப் படைகளை வலுப்படுத்தத் காவல்துறைத் துறையில் அதிக எண்ணிக்கையிலான புதிய பணியிடங்களை அரசு உருவாக்கியுள்ளது. 65 ஆய்வாளர்கள், 260 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1,300 காவலர்கள் என ஒரு பிரம்மாண்டமான போலீஸ் படை இதற்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சிறப்புப் படையிலும் ஒரு ஆய்வாளர், நான்கு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 20 காவலர்கள் இடம்பெறுவார்கள். இவர்கள் நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் உளவுத் தகவல்கள் மூலம் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கண்டறிந்து மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுப்பார்கள்.

முதலமைச்சர் விஜய் இந்தப் புதிய சிறப்பு அதிரடிப் படைகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தைப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கான இந்த “மாஸ்டர் பிளான்” பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது இந்தப் படைகள் இனி கருணையின்றிப் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறையைப் பாதுகாக்க விஜய் அரசு எடுத்துள்ள இந்தத் துணிச்சலான முடிவு, குற்றவாளிகளுக்கு ஒரு மரண பயத்தைக் காட்டியுள்ளது என்றே சொல்லலாம்.

Related News

Latest News