ஆண்களை விட பெண்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் ஒரே நாடு.. எது தெரியுமா?

இன்றைய உலகில் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக பெண்கள் வேலை செய்கின்றனர். இதன் விளைவாக பொருளாதாரம், கல்வி போன்றவற்றில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட நாட்டில் மட்டும் ஆண்களை விட பெண்கள் அதிக சம்பளம் வாங்குகின்றனர். அது எந்த நாடு என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

பல நாடுகளில் பெண்கள் ஆண்களை விட சுமார் 20% குறைவான சம்பளம் பெறுகின்றனர். இந்த சூழலில் ‘லக்சம்பர்க்’ நாட்டில் ஆண்களை விட பெண்கள் அதிக ஊதியம் பெறுகின்றனர். அங்கு பெண்கள் ஆண்களை விட 0.7% அதிகமாக சம்பாதிக்கின்றனர்.

பாலின சமத்துவத்துக்கான வலுவான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் மற்றும் அரசு துறையில் பெண்களின் கணிசமான பங்கு, நிலைத்த சம்பளம் மற்றும் பதவிகள் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

2016-ல் லக்சம்பர்க் அரசு, பாலின அடிப்படையில் ஊதிய பாகுபாடு செய்யக்கூடாது என வலுவான சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனால் அனைத்து நிறுவனங்களும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

லக்சம்பர்க்கில் குழந்தை பராமரிப்பு நலன்கள் ஆகியவற்றில் ஆண்-பெண் சம உரிமை உள்ளது. அங்கு ஆண்களும் குழந்தை பராமரிப்புக்காக விடுப்பு எடுக்கலாம். இதனால் பெண்கள் வேலையை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் பணியாற்றுகின்றனர்.

Related News

Latest News