Thursday, February 5, 2026

‘அவருக்கு வயதாகி விட்டது, தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் தெரியாது’ – அன்புமணி பேச்சு

சென்னை மகாபலிபுரத்தில் தமிழகம் முழுவதுமுள்ள பாமக பொறுப்பாளர்கள் கூட்டம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்தது.

இதில் அன்புமணி பேசியதாவது : இது அன்புமணி ராமதாஸின் காலம் பழைய மன நிலையில் மக்கள் கிடையாது அனைத்து தரப்பு மக்களும் அன்புமணியை ஏற்று கொண்டிருக்கிறார்கள்.

திமுக சூழ்ச்சி செய்து வன்னியர்களையும், பட்டியலின மக்களையும் ஒன்று சேர விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

அய்யா ராமதாசை சுற்றி தீய சக்திகளும், தி.மு.க.வின் கைக்கூலிகளும் இருக்கிறார்கள். அந்த துரோகிகளை ஒருபோதும் நான் மன்னிக்கப் போவது கிடையாது.

பாமகவை களத்தில் நேரடியாக சந்திப்பதற்கான தைரியம் திமுக வுக்கு கிடையாது. பாமக வில் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கிறது திமுக.

என்னைப் பற்றி தவறான விஷயங்களை எல்லாம் சொல்லி ஐயாவுக்கும் எனக்கும் பகையை உருவாக்கியது ஜிகே மணி தான்.

ராமதாஸ் குழந்தை மாதிரி, அவருக்கு தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் தெரியாது. அவருக்கு 87 வயதாகி விட்டது.

இன்னும் 3 மாதத்தில் யார் யார் சிறைக்கு செல்ல போகிறார்கள் என பார்த்துக்கொண்டிருங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related News

Latest News