Thursday, February 5, 2026

எனது பெயரையோ, படத்தையோ அன்புமணி பயன்படுத்தக் கூடாது – ராமதாஸ் பேட்டி

விழுப்புரத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ், “தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தோம். சம்பந்தமுமின்றி அன்புமணி தரப்பு பொய் மூட்டைகளுடன் ஆஜரானது. தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்ட ஆவணத்தில் எனது கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளது.

எனது பெயரையோ, படத்தையோ அன்புமணி பயன்படுத்தக் கூடாது. வேண்டுமென்றால் அன்புமணி தனிக்கட்சி தொடங்கட்டும். இனி என் பெயர், படத்தை அன்புமணி பயன்படுத்தக் கூடாது. அதற்கு அவருக்கு உரிமை இல்லை.

பாமக என்றால் நிறுவனராகிய நான் உருவாக்கினேன். கட்சியின் பெயரை சொல்லவோ, சொந்தம் கொண்டாட வோ யாருக்கும் அதிகாரம் இல்லை.

நீ வேண்டுமானால் தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்துக் கொள் என நான் பலமுறை அவரிடம் சொல்லிவிட்டேன்.

ஒட்டு கேட்கும் கருவி வைத்தது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் கொடுத்தோம். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.

Related News

Latest News