“அவர் ஒன்னும் பெரிய தலைவர் இல்லை” : இ.பி.எஸ் க்கு செங்கோட்டையன் பதில்

தவெகவில் இணைந்த செங்கோட்டையனை தாக்கி, நேற்று கோபிச்செட்டிபாளைய பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.

“வாக்குகளை கேட்க வீடு வீடாக வந்தவர், ராஜினாமா செய்ய மக்களிடம் அனுமதி கேட்டாரா?. அவரை அடையாளப்படுத்தியது, பதவி கொடுத்தது அதிமுக. ஆனால் இன்று மாற்றுக்கட்சிக்கு சென்றிருக்கிறார். இவரா உங்களுக்கு நன்மை செய்ய போகிறார்? கடந்த 2-3 ஆண்டுகளாகவே உள்ளிருந்தே கட்சிக்கு துரோகம் செய்தவர் என விமர்சித்து பேசினார்.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில், எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “அவர் பெரிய தலைவர் அல்ல; அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. என்னை பொறுத்தவரை தெளிவாக உள்ளேன். மக்கள் பதில் அளிப்பார்கள்” என தெரிவித்தார்.

Related News

Latest News