Thursday, December 25, 2025

பைக் வாங்கி தராததால் விரக்தி : 18 வயது மாணவன் விபரீத முடிவு

சென்னை அடையாறு ராமசாமி கார்டனை சேர்ந்த நாகராஜன். இவருடைய மகன் ஹரிகரன் (வயது 18), இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து வந்தார். ஹரிகரன் தனது தந்தையிடம் பைக் வாங்கி தரவேண்டும் என்று அடம்பிடித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அவரது தந்தை மகனின் வயதை காரணம் காட்டி பைக் வாங்கி தராமல் காலம்தாழ்த்தி வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரிகரன் தனது தந்தைக்கு தெரியாமல் அவரது மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றுள்ளார். அப்போது கவன குறைவால் மோட்டார் சைக்கிளில் இருந்து ஹரிகரன் கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில் உடலில் ஏற்பட்ட சிராய்ப்புகளை பார்த்த அவரது தந்தை, ஹரிகரனை கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த ஹரிகரன் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சாஸ்திரிநகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Related News

Latest News