நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் புகழ் ஓங்குக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் விஸ்வநாத பிரதாப் சிங்கின், நினைவுநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக விளங்கிய வி.பி.சிங்கின்,
சமூகநீதி சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன் என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
EWS, NEET என விதவிதமான வழிகளில் சமூகநீதியைக் குழிதோண்டி புதைக்கும் ஆட்சியாளர்கள் மத்தியில், வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே Miss செய்கிறோம் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
