கோவை, துடியலூர் – சரவணம்பட்டி சாலையில் அமைந்து உள்ள ரயில்வே கிராசிங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றது.
ரயில்வே கேட் திடீரென கீழே விழுந்ததால் அங்கு சென்று கொண்டு இருந்த வாகனங்கள் மற்றும் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
கோவை துடியலூரில் இருந்து சரவணம்பட்டி நோக்கிச் செல்லும் மக்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் ரயில்வே கிராசிங் – கை கடந்து கொண்டு இருந்த நேரத்தில், எச்சரிக்கை மணி ஒலிக்காமல், எந்த அறிகுறியும் இன்றி ரயில்வே கேட் திடீரென கீழே விழுந்து உள்ளது. இதனால் கேட்டைத் தாண்ட முயன்ற வாகன ஓட்டிகள் தப்பி ஓடியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
