டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் வரும் 28 முதல் 30ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
வரும் 28 – 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளதால், டெல்டா மாவட்டங்களில் மழை முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை மாவட்ட ஆட்சியர்களுடன் வருவாய் நிர்வாக ஆணையர் ஆலோசனை நடத்தினார்.
நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்துகொள்ள வேண்டும். கொள்முதல் மையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும். கூடுதல் மின்கம்பங்கள், மின்வடங்கள் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
