சேலம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் நாளை (25.11.2025) செவ்வாய்க்கிழமை மின் வாரியம் மாதாந்திர மின் பாதை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளது. இதன் காரணமாக, பின்வரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்
சேலம் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தைச் சேர்ந்த அஸ்தம்பட்டி, காந்தி ரோடு, வின்சென்ட், மறவனேரி, மணக்காடு, சின்ன திருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, கொண்டப்ப நாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், நான்கு ரோடு, மிட்டா பெரிய புதூர், சாரதா காலேஜ் ரோடு, செட்டி சாவடி, விநாயகம்பட்டி, நகர மலை அடிவாரம் ஆகிய பகுதிகள்.
