கடந்த தீபாவளி பண்டிகைக்கு முன்பு ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டும் நிலைக்கு சென்றிருந்தது. ஆனால், அதன் பின்னர் தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு பதிவாகி வருகிறது. குறிப்பாக நவம்பர் மாதம் முழுவதும் தங்கத்துக்கு ஏற்றத் தாழ்வுகள் அதிகமாக இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் இரண்டு முறை தங்க விலை குறைந்தது நகை ஆர்வலர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.
நேற்று மாலை 22 காரட் தங்கத்தின் விலையில் கிராமுக்கு ரூ.100 குறைவு ஏற்பட்டதால், ஒரு கிராம் ரூ.11,740 என்றும் ஒரு சவரன் ரூ.93,920 என்றும் தவிற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் விலையில் தொடர் சரிவு ஏற்பட்டு, கிராமுக்கு ரூ.190 குறைந்து ஒரு கிராம் ரூ.11,550-க்கும் சவரன் ரூ.92,400-க்கும் விற்கப்படுகிறது.
18 காரட் தங்கத்திலும் விலையில் மாறுபாடு பதிவாகியுள்ளது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.9,640 ஆகவும், ஒரு சவரன் ரூ.77,120 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிராமுக்கு ரூ.5 குறைந்து தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், ஒரு கிலோ ரூ.1,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிவால் பண்டிகை பிந்தைய சந்தையில் விற்பனை மீண்டும் சுறுசுறுப்பாகும் என நகை வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்ச்சியான விலை சரிவு காரணமாக குறுகிய காலத்திற்கு இது வாங்குபவர்களுக்கு நல்ல வாய்ப்பு. ஆனால் சர்வதேச சந்தை நிலைமை, டாலர் விலை மற்றும் அரசியல் சூழ்நிலை ஆகியவை விலை மாற்றத்துக்கு காரணமாகும் என்பதால், பெரிய அளவில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இன்னும் சில நாட்கள் விலை ஏற்றத்தாழ்வை கவனித்து முடிவு செய்வது சிறந்தது.
