ஒரே நாளில் இரண்டாவது முறை ஷாக் கொடுத்த தங்கம் விலை! இது தான் காரணம்!

ஆபரணத் தங்கத்தின் விலை நவம்பர் 13ம் தேதியான இன்று திடீரென உயர்ந்துள்ளது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்து, தற்போது ஒரு பவுன் ரூ.95,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தங்க விலை ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்ட நிலையில், நவம்பர் 8 முதல் தொடர்ந்து உயர்வை பதிவு செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,800 ஆகவும், பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.94,400 ஆகவும் விற்பனையானது.

ஆனால், காலை உயர்வுக்குப் பிறகு, மதியம் மீண்டும் தங்க விலை பவுனுக்கு ரூ.800 கூடுதல் உயர்வை எட்டியது. இதன் விளைவாக, இன்று ஒரே நாளில் மொத்தம் பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.11,900 க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.95,200 க்கும் விற்பனையாகிறது.

தங்க விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்திருப்பது, டாலர் மதிப்பு குறைவு, மற்றும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளுக்கு மாறுவதும் காரணமாகக் கூறப்படுகிறது.

இதே நேரத்தில், வெள்ளி விலையும் இன்று உயர்வை பதிவு செய்துள்ளது. காலை ஒரு கிராம் ரூ.9 உயர்ந்த நிலையில், தற்போது மேலும் ரூ.1 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிராம் வெள்ளி ரூ.183 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,83,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச விலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டால், தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்னும் சில நாட்கள் ஏற்றம் நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Related News

Latest News