2 நாள் அரசு முறைப் பயணமாக பூடான் நாட்டிற்கு டெல்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். அந்நாட்டு தலைநகர் திம்புவில் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடி பேசியதாவது:-
டெல்லியில் நேற்று நடந்த கொடூர சம்பவத்தால், கனத்த இதயத்தோடு பூடான் வந்திருக்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை நான் புரிந்துகொள்கிறேன். முழு தேசமும் அவர்களோடு நிற்கிறது. இந்த சதித்திட்டத்தின் அடியாழத்தை எங்களது விசாரணை அமைப்புகள் கண்டுபிடிக்கும். காரணமான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என கூறினார்.
