செயல்படாத பழைய வங்கிக் கணக்குகளில் பணத்தை எடுக்க முடியுமா? – RBI சொன்ன முக்கிய அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட புதிய தகவலின்படி, செயல்படாத பழைய வங்கிக்கணக்குகளில் உள்ள பணத்தை கண்டறிந்து பெறும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

உங்கள் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக்கணக்குகள், 2 ஆண்டுகளுக்கு மேல் செயல்படவில்லை என்றால் அல்லது பணம் கோராத டெபாசிட்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் இருப்பின், அந்த பணம் RBI-யின் டிஇஏ நிதிக்கு மாற்றப்படும்.

செயல்படாத இந்த தொகையை நீங்கள் அல்லது உங்கள் சட்டப்பூர்வ வாரிசுகள் எந்த நேரத்திலும் கோரக்கூடியவர்கள்.

இதற்கான நீடிப்பான தேவை இருந்தால், udgam.rbi.org.in என்ற இணையதளத்தில் உங்கள் வங்கிக் கணக்காளரின் பெயர் மற்றும் மொபைல் எண்ணை பதிவிட்டு தேடலாம். இதில் 30 வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன.

ஆன்லைனில் அல்லது நேரிலே வங்கிக் கிளையை தொடர்பு கொண்டு, ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை சமர்பித்து உரிமையை பெறலாம்.

RBI 2025 அக்டோபர் முதல் டிசம்பர் வரை அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி, இந்த பணத்தை எளிதாக பெற வசதியளிக்கிறது.

Related News

Latest News