அமெரிக்காவில் பல்வேறு அரசு துறைகளுக்கான செலவின மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாததால் கடந்த அக்டோபர் மாதம் முதல் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இதனால் 6.7 லட்சம் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டிருக்கின்றனர். மேலும் 7.3 லட்சம் ஊதியமின்றி பணியாற்றி வருகின்றனர்.
விமான நிறுவன பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால், அமெரிக்காவின் 40 நகரங்களில், முக்கியமாக நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ போன்ற இடங்களில், 10 சதவீத விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. பின்னர் 4 சதவீதம் மட்டும் சேவை ரத்துசெய்யப்பட்டது.
வரும் 14-ந்தேதிக்குள் 10 சதவீத விமான சேவை மீண்டும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளொன்றுக்கு 1800 விமானங்கள் ரத்து செய்யப்படும். இதன் காரணமாக 2,68,000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
