அருகில் இருந்தவர் திடீர் மயக்கம்.. பதறிப்போன டிரம்ப்

அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அருகே இருந்த நிர்வாகி ஒருவர் திடீரென மயக்கமடைந்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில், மருந்துகளின் விலையைக் குறைக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் மருத்துவ அதிகாரிகள் உள்பட மருந்து நிறுவனங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, மருந்து விலைக் குறைப்பு குறித்து டிரம்ப் அறிவிக்கும்போது நிர்வாகி ஒருவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதையடுத்து அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளார்.

Related News

Latest News