பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர புயல் : 140 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியை கல்மேகி சூறாவளி புயல் கடுமையாக தாக்கியது. இந்த புயல் தாக்குதலின்போது வீடு மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனையடுத்து, பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி பெர்டினண்ட் மார்கோஸ் தேசிய பேரிடராக இதனை அறிவித்து உள்ளார்.

கடந்த சில நாட்களாக நீடித்து வந்த இந்த புயல் தாக்குதலுக்கு இதுவரை 140 பேர் பலியாகி உள்ளனர். புயலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 5 லட்சம் பிலிப்பைனைஸ் மக்கள் புலம் பெயர்ந்து சென்று விட்டனர்.

Related News

Latest News