தென்ஆப்பிரிக்காவில் நடக்கும் ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தென்ஆப்பிரிக்காவில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. நான் அதில் பங்கேற்க மாட்டேன். தென்ஆப்பிரிக்கா இனி ஜி20 கூட்டமைப்பில் கூட இருக்கக் கூடாது. ஏனெனில் அந்நாட்டில் நடக்கும் விஷயங்கள் மோசமாக உள்ளன.
அங்கு அந்த உச்சிமாநாடு நடைபெறக் கூடாது. நான் செல்லமாட்டேன் என்பதை அவர்களிடம் சொல்லிவிட்டேன். தென்ஆப்பிரிக்காவில் எங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த நான் விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
