போலீஸ் நிலையத்தில் சிறுவன் செய்த செயல்!! குவியும் பாராட்டு…

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் மஞ்சேஸ்வரம் போலீஸ் நிலையம் உள்ளது. அங்கு ஒரு குடும்பத்தினர், புகார் மனு கொடுக்க வந்தனர். அந்த குடும்பத்தில் UKG படிக்கக்கூடிய ஒரு சிறுவனும் இருந்தான். புகார் கொடுக்க வந்தவர்களிடம் புகார் மனுவை எழுதித் தருமாறு போலீசார் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

அவர்களும் அமர்ந்து மனு எழுதிக் கொண்டிருந்த அப்போது அங்கிருந்த சிறுவன், போலீஸ் அதிகாரி அமர்ந்திருந்த இருக்கையை நோக்கி சென்று, போலீஸ் அதிகாரி ஒருவரிடம், “நான் ஒரு பாட்டு பாடலாமா?” என்று கேட்டான். அதற்கு அவரும் சிறுவன் பட புத்தகத்தில் உள்ள பாடலைத்தான் பாடப்போகிறான் என்று நினைத்து படிக்குமாறு கூறியிருக்கிறார்.

ஆனால் அச்சிறுவன்,”ஒரு பனானா ஒரு பூ தருமோ” என்ற பாடலை தகுந்த ராகத்துடன் மிகவும் அழகாக பாடினான். அவன் பாடியதை கேட்டு போலீஸ் அதிகாரி மட்டுமின்றி, அங்கிருந்த மற்ற போலீசாரும் ஆச்சரியமடைந்தனர். அதன் பின்னர் அவனை அனைத்து போலீசாரும் கைகுலுக்கி பாராட்டினர். போலீஸ் நிலையத்தில் போலீசாரின் முன்னிலையில் அவன் பாடிய வீடியோவை, போலீஸ் அதிகாரி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார்.

மேலும் கேரள காவல்துறையின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்திலும் அந்த வீடியோ வெளியிடப்பட்டது. தற்போது, சிறுவன் பாடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரவாகி இருக்கிறது.

Related News

Latest News