இந்திய ரயில்வே மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, புதிய வந்தே பாரத் ரயில் கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, திரிசூர் ஆகிய ஏழு முக்கிய நிலையங்களில் நின்று செல்லும், மேலும், இது வாரம் ஆறு நாட்கள் அதாவது, திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என அனைத்து நாட்களும் இயக்கப்படும். பயணி 7 நாற்காலி கார் + 1 Executive Chair Car வசதிகளுக்காக வழங்கப்படுகிறது.
மேலும், இந்த ரயில் பயண பாதை கோயம்புத்தூர் டூ பாலக்காடு வழியாக இருக்கும். அதனால் கோவை வழியாக பெங்களூரு அல்லது கேரளா செல்லும் பயணிகளுக்கு இது மிகப் பெரிய நன்மையாகும்.
கேரளாவில் இதற்கு முன்னதாக இயங்கும் திருவனந்தபுரம் டூ காசர்கோட் மற்றும் திருவனந்தபுரம் டூ மங்களூர் வந்தே பாரத் ரயில்களுக்கு பிறகு, இது மூன்றாவது சேவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
